இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை காலமானார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தனது 81 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, வெளியிட்ட அறிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார்.
ஊடகத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர், பல முக்கிய செய்திகளை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
இக்பால் அத்தாஸின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறவுள்ளது.
அன்னாரது பூதவுடல் இலக்கம் 11 C/1, சிறிவர்தன வீதி, ஹில் வீதி, தெஹிவளை என்ற முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் இன்று காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




