‘அதிமுக கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி’ – பழனிசாமி தகவலால் பரபரப்பு

அதிமுக கூட்டணியில் ஓரிரு நாளில் புதிய கட்சி இணைய இருப்பதாக, தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணலில் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்களை கட்சி தலைமை பெற்றது. இதில், மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தங்களின் தொகுதியில் போட்டியிட வேண்டும் என 2,187 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.