குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்திரை: பி.ஆர்.பாண்டியன் தகவல்

விளை பொருட்​களுக்கு குறைந்த​பட்ச ஆதார விலையை நிர்​ண​யிக்க வேண்​டும் உள்​ளிட்ட 13 அம்​சக் கோரிக்கைகளை வலி​யுறுத்தி பிப். 7 முதல் கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் யாத்​திரை நடை​பெற உள்​ள​தாக ஐக்​கிய விவசாயிகள் சங்​கத்​தின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் பி.ஆர்.பாண்​டியன் கூறி​னார்.

சங்​கத்​தின் மண்டல நிர்​வாகி​கள் ஆலோனைக் கூட்​டம் சேலத்​தில் நேற்று நடந்​தது.அனைத்து விவசாயிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு பொருளாளர் தங்​க​ராஜ் தலைமை வகித்​தார்.

மண்​டலத் தலைவர் ஆத்​தூர் பெரு​மாள் வரவேற்​றார். தமிழக ஒருங்​கிணைப்​பாளர் பி.ஆர்​.​பாண்​டியன், இணை ஒருங்​கிணைப்​பாளர்​கள் ராமக​வுண்​டர், பாலசுப்​ரமணி​யன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பின்​னர், பி.ஆர்​.​பாண்​டியன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விளைபொருட்​களுக்கு குறைந்​த​பட்ச ஆதார விலையை நிர்​ண​யம் செய்​தல் உள்​ளிட்ட 13 அம்​சக் கோரிக்​கைகளை வலி​யுறுத்தி கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரை 30 விவசாயிகள் பங்​கேற்​கும் யாத்​திரை பிப். 7-ல் தொடங்​க​வுள்​ளது.

இதில் பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த விவ​சாய சங்​கப் பிர​தி​நி​தி​கள் பங்​கேற்​கின்​றனர். யாத்​திரை​யின்​போது பல்​வேறு மாநிலங்​களின் முதல்​வர்​களை சந்​தித்​து, கோரிக்​கைகளை வலி​யுறுத்​து​வோம்.

தமிழகத்​தில் விவசாயிகள் மீது பொய் வழக்கு பதிவது, கைது செய்​வது போன்ற நடவடிக்​கைகள் தீவிரமடைந்​துள்​ளன. விவசாயிகள் ஒப்​புதல் இல்​லாமல், சிப்​காட் என்ற பெயரில் நிலங்​கள் கையகப்​படுத்​தப்​படு​கின்​றன.

கார்ப்​பரேட் நிறு​வனங்​களுக்கு சாதக​மாக சட்​டத்தை உரு​வாக்​கி, தொழில்​புரட்சி என்ற பெயரில் நீர்​நிலைகளை​யும் சேர்த்து விவ​சாய நிலங்​கள் கையகப்​படுத்​தப்​படு​கின்றன.

கார்ப்​பரேட் எண்​ணம் கொண்​ட​வர்​கள் அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றுள்​ள​தால், முதல்​வருக்கே தெரி​யாமல் விவ​சா​யிகளுக்கு எதி​ரான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. இவ்​வாறு பிஆர்.பாண்​டியன் தெரி​வித்​தார்​.