மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர் பயிற்சிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

மாபெரும் தமிழ்க் கனவு திட்​டத்​தின்​கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்​சிப் பட்​டறை நடத்​து​வதற்​காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து உயர்​கல்​வித் துறைச் செயலர் பொ.சங்​கர் வெளி​யிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்​ணின் சிறப்​பு​களை இளைய தலை​முறை​யினருக்கு கொண்டு செல்ல வேண்​டி​யுள்​ளது.

இதற்​காக தமிழர் மரபும்-நாகரி​க​மும், தமிழகத்​தில் சமூகநீ​தி, பெண்​கள் மேம்​பாடு, சமூகப் பொருளா​தார முன்​னேற்​றம் உள்​ளிட்ட தலைப்​பு​களில் ஆளு​மை​களைக் கொண்டு அமர்​வு​களை நடத்​தலாம். அதில் மொழிப்​பற்​றாளர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆய்​வறிஞர்​கள் உள்​ளிட்​டோரை கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு திட்​டத்​தின்​கீழ் பயிற்​சிப் பட்​டறை​கள் நடத்​தலாம்.

அதன்​படி நடப்பு கல்​வி​யாண்​டில் 1,200 ஆசிரியர்களை கண்​டறிந்து பயிற்சி பட்​டறை​கள் நடத்​தப்​படும். அதை சென்​னை, கோவை, திருச்​சி, மதுரை என 4 மண்​டலங்​களாகப் பிரித்து மாதம் ஒன்று வீதம் 3 மாதங்​களில் மொத்​தம் 12 அணி​களுக்​குப் பயிற்​சி​யளிக்​கப்​படும்.

ஓர் அணி​யில் சராசரி​யாக 100 நபர்​களுக்கு 2 நாட்​கள் உண்​டு, உறை​விடப் பயிற்சி அளிக்​கலாம் என்று கல்​லூரிக் கல்வி ஆணை​யர் அரசுக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

ஆணை​யரின் கருத்​துருவை கவன​முடன் ஆய்​வுசெய்த அரசு, மாபெரும் தமிழ்க் கனவு திட்​டத்​தின்​கீழ் 1,500 ஆசிரியர்களுக்கான பயிற்​சிப் பட்​டறை நடத்​து​வதற்​கான அனு​ம​தி​யும், அதற்கு செல​வின​மாக ஒரு நிகழ்​வுக்கு ரூ.7 லட்​சத்து 56,250 வீதம் 12 நிகழ்​வு​களுக்கு ரூ.1 கோடியே 8 லட்​சத்து 75 ஆயிரம் நிதி ஒப்​பளிப்பு வழங்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

முன்​ன​தாக மாபெரும் தமிழ்க்​க​னவு திட்​டத்​தின்​கீழ் மாநிலம் முழு​வதும் உள்ள கல்​லூரி​களில் துறை​ சார்ந்த நிபுணர்​கள், எழுத்​தாளர்​கள் மற்​றும் அறிஞர்​களை கொண்டு சிறப்​புச் சொற்​பொழி​வு​கள் மற்​றும் கலந்​துரை​யாடல்​கள் நடத்​தப்​பட்​டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.