விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியாக, ஏர்போர்ட் மூர்த்தி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கடந்த ஆண்டு கைது செய்தனர்.
பின்னர் ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஏர்போர்ட் மூர்த்தி சார்பில் அவரது மனைவி ஜெய்குமாரி, சென்னை உயர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார்ர் தரப்பில் வழக்கறிஞர் வி.பார்த்திபன் ஆஜராகி, ‘‘போலீஸார் இந்த வழக்கை சரிவர விசாரிக்கவில்லை.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காமல், தாக்குதலுக்கு உள்ளானவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.
எனவே, குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தர வை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.





