அசோக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு அமலாக்​கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, கடந்த அதி​முக ஆட்சி காலத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது போக்​கு​வரத்​துக் கழகத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 3 வழக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யும் தனி​யாக செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்​டோர் மீது சட்​ட​ விரோதப் பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது செந்​தில் பாலாஜி ஆஜராக​வில்​லை. அவரது சகோ​தரர் அசோக்குமார் ஆஜராகி இருந்தார்.

இந்த வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி அசோக்குமார். கார்த்​தி​கேயன், அனு​ராதா ரமேஷ் ஆகியோர் மனுக்​களை தாக்​கல் செய்​திருந்​தனர். அதையடுத்​து, இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை பிப்​.17-க்​கு நீதிபதி தள்ளிவைத்தார்.