வடமராட்சி கிழக்கில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு அடையாளம்

யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனைப் பகுதியில்   சனிக்கிழமை (07.02.2026) பிற்பகல் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 
வடமராட்சி கிழக்குச் செம்பியன்பற்றுப் பகுதியில் வசிக்கும் சிலர் சனிக்கிழமை பிற்பகல் ஆடு மேய்ப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச்  சென்ற போது வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டொன்று காணப்படுவதை அவதானித்து உடனடியாக மருதங்கேணிப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார் வகைக் குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்காக உடனடியாகத் தகவலை அனுப்பி வைத்துள்ளனர். தற்போது குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.