“காங்கிரஸ் கோரிக்கை எடுபடாது!” – உறுதியாகச் சொல்கிறார் வைகோ

ம​தி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கோவில்​பட்​டி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரா​விட இயக்​கத்தை பாது​காக்க, தமிழ்​நாட்​டில் இந்​துத்​துவ சக்​தி​கள் ஊடுருவ அனு​ம​திக்க கூடாது என்​ப​தற்​காகத்​தான் திமுக​வுடன், மதி​முக கூட்​டணி அமைத்​தது. கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக இருக்​கி​றோம். திரா​விட மாடல் ஆட்​சியை நடத்​துகின்ற முதல்​வர் ஸ்டா​லின், மீண்​டும் முதல்​வ​ராகி ஆட்சி அமைப்​பார் என்​ப​தில் எனக்கு அசைக்க முடி​யாத நம்​பிக்கை இருக்​கிறது.

கூட்​ட​ணி​யில் உள்ள ஒவ்​வொரு கட்​சிகளும் ஒவ்​வொரு கருத்தை சொல்​லிக் கொண்டு இருக்​கின்​ற​னர். ஆட்​சி​யில் பங்கு வேண்​டும், அதிக இடங்​கள் வேண்​டும் என்று கேட்​பது அவர​வர் உரிமை. ஆனால் மதி​முக கடந்த நான்​கரை ஆண்டு காலத்​தில் அவ்​வித​மான எவ்​வித நிபந்​தனை​யும் விதிக்​கவோ, அது​போன்று ஒரு சொல் கூட சொல்​லியது கிடை​யாது.

வரும் தேர்​தலில் திமுக தனிப்​பெரும்​பான்மை பெற்று மீண்​டும் ஆட்​சியை தொடரும் என்​ப​தில் அசைக்க முடி​யாத நம்​பிக்கை வைத்​திருக்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​கள் அவரிடம், காங்​கிரஸ் கட்சி ஆட்​சி​யில் பங்கு கேட்​பது குறித்து கேட்​ட​போது, “தனிப்​பெரும்​பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்​கும்​போது இந்த கோரிக்​கை​கள் எல்​லாம் எடு​ப​டாது, ஏற்​கப்​ப​டாது” என வைகோ பதிலளித்​​தார்​.

சமீபத்திய செய்திகள்