பலப்பிட்டிய – ரந்தொபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலோர காவற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (18) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட ஆமை முட்டைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



