தமிழக அரசின் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால வரவு – செலவு திட்ட அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
தமிழ்நாடு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை அடைய பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்திய திராவிட மாடல் அரசின் சாதனைகள் நிதிநிலை அறிக்கையில் நிரம்பி உள்ளன.
ஏற்றுமதியைப் பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதத்தைவிட (7.4%), தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024-25 நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.2 சதவீதமாக இருந்த நிலையில், நிகழ் நிதியாண்டிலும் இது இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இது, நாட்டின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட ஏறத்தாழ இரு மடங்கு ஆகும்.
நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15 சதவீத பங்களிப்பை வழங்கி, அனைத்து மாநிலங்களையும்விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. குஜராத் (13%), மகாராஷ்டிரம் (13%) போன்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னிலையில் இருக்கிறது.
நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சி 4.5 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் உற்பத்தித் துறை வளர்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக 14.7%-ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, மின்னணுவியல் ஏற்றுமதியில் நாட்டின் பங்களிப்பில் 41 சதவீதம் தமிழகத்திலிருந்து மட்டுமே கிடைக்கிறது.
தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.3.62 லட்சமாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் சராசரியைவிட 1.77 மடங்கு அதிகம்.
உற்பத்தித் தொழில் துறை 14.74 சதவீத வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. இது தேசிய சராசரியான 4.5 சதவீதத்தைவிட மும்மடங்கு அதிகம்.
நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15 சதவீத பங்களிப்பை வழங்கி, அனைத்து மாநிலங்களையும்விட தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கல்வி, நல்வாழ்வு, சமூக நலத் திட்டங்களுக்காக ரூ.1.57 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
1,076 கி.மீ. கடற்கரையைக் கொண்ட தமிழகத்தின் கடல் சார் பொருளாதார வளர்ச்சி குறித்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை, 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கான இலக்கை நோக்கியதாக அமைந்துள்ளது.
ஐந்தாண்டு கால திராவிட மாடல் அரசின் ஏராளமான சாதனைகளை நிதிநிலை அறிக்கை முன் வைத்திருக்கிறது.
தமிழ்நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது.
ஜிஎ°டி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் 9,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவுத் திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்றிய அரசின் வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் 1,202 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் 3,548 கோடி ரூபாய், ஜல் ஜீவன் இயக்கத்திற்கு 3,112 கோடி ரூபாய் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் 2,246 கோடி ரூபாய் நிறுத்தி வைத்து ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் நிதி நெருக்கடிகளை சமாளித்து தமிழ்நாட்டு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் பயணிக்க செய்துள்ளதை இடைக்கால நிதிநிலை அறிக்கை உறுதி செய்துள்ளது.
கடந்த 5 வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளில் ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.47,248 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியானaமுயற்சிகளால் வேளாண் பரப்பளவு 3 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளது.
கூட்டுறவுத்துறை மூலம் ரூ.69,087 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் சார்ந்த கடன்களுக்கு வட்டி மானியம் மற்றும் வட்டி ஊக்கத் தொகை ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.2,045 கோடி
நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 137 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வணிகம் ஆகியுள்ளன.
100 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
8,000 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 17,860 ஹெக்டேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் ரூ.80 கோடிமதிப்பிலான பனை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன
496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது..
மக்காச்சோளம் ஊக்குவிப்பு திட்டம் ரூ.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கரில் இருந்து 12 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக வேளாண் துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள் தொடர்வதற்கு இடைக்கால வேளாண் வரவு செலவுத் திட்டத்தில் வழிவகை காணப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் எவரையும் பின்தங்கி விட அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் தளபதி மு.க. °டாலின் கூறியுள்ளதை செயல்படுத்தும் வகையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை வரவேற்கத்தக்கதாக இருப்பது பாராட்டத்தக்கது.





