வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியடி பிரதேசத்தில் உள்ள ஆற்றின் நடுவில் பல வாருடங்களாக நடைபெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று வியாழக்கிழமை (19) அதிகாலை கிழக்குமாகாண பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் சுற்றி வளைக்கப்பட்டது.
இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா 07 இலட்சத்து 58 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா கைப்பற்றப்பட்டதுடன் 30 ஆயிரம் மில்லிலீட்டர் வடி சாராயமும் கைப்பற்றப்பட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.




