பிரான்சில், மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பெண் ஒருவர்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள பெண்
பிரான்ஸ் கலாச்சாரத்துறை அமைச்சரான ரச்சிதா டதி (Rachida Dati), பாரீஸ் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளார். மார்ச் மாதம் 15ஆம் திகதி பாரீஸில் மேயர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேயர் பதவிக்காக போட்டியிடுவதற்காக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அனுப்பியுள்ள நிலையில், மேக்ரான் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகம் டதியின் ராஜினாமா குறித்து தெரிவித்துள்ள செய்தியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக டதி பிரான்ஸ் மக்களுக்கு ஆற்றிய சேவைக்காக அவருக்கு மேக்ரான் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதாகவும், அவர் அடுத்து மேற்கொள்ள இருக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




