புலம்பெயர்தல் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜேர்மனியில், வலதுசாரி புலம்பெயர்தல் கட்சி ஒன்றிற்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.

அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜேர்மன் வலதுசாரி புலம்பெயர்தல் கட்சியான Alternative for Germany (AfD) கட்சியை, பயங்கரவாத வலதுசாரிக் கட்சி என அழைப்பதை ஜேர்மன் உளவுத்துறை நிறுத்தவேண்டும் என Cologne நகர நிர்வாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அரசியலமைப்பு பாதுகாப்புக்கான ஃபெடரல் அலுவலகம். 2025ஆம் ஆண்டு மே மாதம், AfD கட்சியை சான்றளிக்கப்பட்ட வலதுசாரி பயங்கரவாதக் கட்சி என வகைப்படுத்தியது.பதிலுக்கு, AfD கட்சி அதற்கு எதிராக அவசர தடை உத்தரவு கோரியது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில்தான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் தொழுகை அழைப்பைத் தடை செய்வதற்கான கோரிக்கைகள் உட்பட, AfD கட்சியில் அரசியலமைப்பிற்கு விரோதமான அறிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், அந்தக் கட்சியை ஒட்டுமொத்தமாக பயங்கரவாதக் கட்சி என குறிப்பிட அவை போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆக, இந்த வழக்கில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை, நீதிமன்றம் விதித்துள்ள இந்த தடை உத்தரவு செல்லுபடியாகும். என்றாலும், எப்போது இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்