அவசரகால சட்டத்தை மீண்டும் நீண்டிப்பதற்கான பிரேரணை ஒன்றை இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
டித்வா புயல் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண சேவைகளை தடையின்றி வழங்குவதற்காக அவசரகால சட்டம் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இறுதியாக கடந்த மாதம் மேலும் ஒரு மாதகாலத்துக்கு இந்த சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கடந்த மாதம் 28 ஆம் திகதியுடன் அவசரகால சட்டத்தின் சட்ட காலம் முடிவடைந்துள்ளது.
அதன் பிரகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளரின் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. அத்துடன் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண வேலைத்திட்டங்கள் இன்னும் முழுமைப்படாமல் இருக்கின்றன. அதனால் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவே தெரியவருகிறது.
அதனால் இந்த வாரத்துக்கான பாராளுமன்றம் இன்றுமுதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடுகிறது. இதன்போது அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பான பிரேரணையை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




