மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரையும் பிரான்ஸின் போர்க்கப்பல்: மக்ரோன் அதிரடி அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் பிரான்ஸ் தங்களுடைய போர்க்கப்பலை இப்பகுதியில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக ஈரான் ராணுவமும் அருகிலுள்ள அமெரிக்காவின் விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நட்பு நாடுகளுக்கு ஆதரவாக பிரான்ஸ் தன்னுடைய விமானம் தாங்கி போர்க் கப்பல்களை  அனுப்பி வைக்க இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

வெளியான தகவல்கள் படி, மத்திய கிழக்கில் பிரான்ஸின் முதன்மை போர்க்கப்பலான “சார்லஸ் டி கோல்” நிலைநிறுத்தப்பட உள்ளது.

சைப்ரஸில்(Cyprus) அமைந்துள்ள பிரித்தானியாவின் மிக முக்கியமான ராணுவ மையமான RAF அக்ரோட்டிரி(RAF Akritiri) பிரிட்டிஷ் விமானப்படை தளம் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த “சார்லஸ் டி கோல்”  போர்க்கப்பல் சைப்ரஸிக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் இந்த நடவடிக்கை முற்றிலும் தற்காப்பு நோக்கத்திற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் நட்பு நாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது பிரான்ஸின் முதன்மை கடமை என்றும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.