இலங்கை அரசாங்கத்துக்கும் மொராக்கோ அரசாங்கத்துக்கும் இடையில் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா தேவையிலிருந்து பரஸ்பரம் விலக்கு அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கும் மொராக்கோவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி மற்றைய நாட்டிற்குள் நுழைவதற்கும், தங்கியிருப்பதற்கும் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதிக்கும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தகைய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தங்கியிருக்கும் காலம் 30 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், முன்மொழியப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.



