யாழ்ப்பாணம் – கைட்ஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் கடற்கரைப் பகுதியில், கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை (04) பகல் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இதன்போது, சுமார் 368 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைட்ஸ் பொலிஸார், கடற்படை மற்றும் பொலிஸ் விசேட பிரிவினருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வேலணை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கேரள கஞ்சா தொகையானது மீன்பிடி படகு ஒன்றின் மூலம் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கைட்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





