கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து, 6 கிலோகிராம் 590 கிராம் குஷ் ரக போதைப்பொருள் மற்றும் 4 கிலோகிராம் 910 கிராம் ஹஷீஸ் ரக போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.





