புத்தளம் அம்மாதோட்டம் பள்ளிவாசல் துறையில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்துக்கெனச் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் சனிக்கிழமை (07.03.2026) மாலை ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆசனக் கல்லுடன் கூடிய புதிய விக்கிரகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று புதிய விக்கிரகங்களை வழங்கி வைத்தார்.






