யாழ் நயினாதீவில் இன்று திங்கட்கிழமை (09.03.2026) மாலை இரு பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு வாள்வெட்டில் முடிந்ததில் பூசகரொருவர் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயப் பூசகர் வாளால் வெட்டியதில் நயினாதீவில் தொழில் நிமித்தம் தங்கியுள்ள நாவலப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான இளம் பூசகரொருவர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் அப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊர்காவற்துறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





