யாழ். மாவட்ட அஸ்வெசுமப் பயனாளிகளிடம் அநாமதேயத் தொலைபேசி அழைப்பு எடுத்துத் தங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், தங்கள் தொலைபேசி இலக்கத்துக்கு வரும் OTP இலக்கத்தினைத் தெரிவிக்குமாறும் கோருகின்றார்கள். அதன் உண்மைத் தன்மை அறியாத சில பொதுமக்கள் தமது தொலைபேசிக்கு வரும் OTP இலக்கத்தினைத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்குரிய வங்கிக் கணக்கிலிருந்து இணையம் மூலம் பணம் களவாடப்படுவதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுதொடர்பாகப் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும், தமது தொலைபேசி இலக்கத்துக்கு வரும் OTP இலக்கத்தினை ஏனையவர்களுக்குப் பகிர்வதனைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுள்ளார்.





