கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை (11) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.

அந்த மகஜரில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவன:

ஆசிரியர்களின் கடமை, பொறுப்பு, சேவையினையும் கருத்திற் கொண்டு அவர்களுக்கு ஓர் ஆசிரிய அங்கீகாரத்தினை பெற்றுத் தரவேண்டும்

முதலாம் தரத்திற்கு பாடசாலைக்கு செல்லும் மாணவர்களுக்கான ஆவணங்களில் முன்பள்ளியின் நற்சான்றிதழினை இணைத்துக்கொள்ளவேண்டும்.

மாதாந்த கொடுப்பனவினை உயர்த்தி அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவவேண்டும்.

நீண்ட காலமாக சேவையாற்றி 60 வயதிற்கு மேல் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு ஓர் உதவித்தொகையை வழங்கவேண்டும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து முள்பள்ளி ஆசிரியர்களுக்குமான ஒரு தரமான அடையாள அட்டையினை வழங்கவேண்டும்

இவ்வாறான கோரிக்கைகள் மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தன.