சிலாபம் மற்றும் கம்பஹாவில் சட்டவிரோத மதுபான வேட்டை: இருவர் கைது!

நாட்டின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (11) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கம்பஹா பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை (11) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்