ஹார்​முஸ் ஜலசந்​தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு – இந்தியா பரிசீலனை

அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் இணைந்​து, ஈரான் மீது தாக்​குதல் நடத்​தி வரும் நிலை​யில் தங்​கள் எல்​லையை ஒட்டியுள்ள ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முடக்​கி​யுள்​ளது. இதனால் அவ்வழி​யாக செல்​லும் கச்சா எண்​ணெய் கப்​பல் போக்கு​வரத்து பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தியை இந்​திய எண்​ணெய் கப்பல்கள் கடந்து வரு​வதற்கு பாது​காப்பு அளிக்க கடற்​படை கப்பல்​களை அனுப்​புவது குறித்து இந்​தியா பரிசீலித்து வரு​வ​தாக நியூ​யார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவிக்​கிறது.

கடற்​படை பாது​காப்பு வேண்​டும் என இந்​திய கப்​பல் உரிமையாளர்​கள் விடுத்த கோரிக்​கையை தொடர்ந்து அது குறித்து இந்​தியா பரிசீலித்து வரு​கிறது என இந்​தி​யா​வின் முக்​கிய கடல்​சார் ஆணை​யத்​தின் மூத்த அதி​காரி கேப்​டன் பி.சி.மீனாவை மேற்​கோள் காட்டி அந்த நாளிதழ் செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

இந்திய மாலுமிகள், கடல் சார் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கப்பல் போக்குவரத்து இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்வானந்த சோனோவால் அண்மையில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.