இன்று முதல் ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை உயர்த்​தி​யுள்​ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.

இது தொடர்​பாக ஏர் இந்​தியா விமான நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது:

3 கட்டமாக கட்டணம் உயர்வு

உள்​நாடு மற்​றும் சர்​வ​தேச விமானங்​களின் பயணி​கள் கட்​ட​ணம் 3 கட்​ட​மாக அதி​கரிக்​கப்​படு​கிறது.

அதன்​படி, முதல் கட்​ட​மாக மார்ச் 12-ம் தேதி (இன்​று) அதி​காலை முதல் உள்​நாடு மற்​றும் சார்க் நாடு​களான இலங்​கை, வங்​கதேசம், பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், நேபாளம், பூடான் செல்​லும் சர்​வ​தேச விமானங்​களுக்கு ரூ‌‌.399 கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​கிறது.

பயணிகள் அதிர்ச்சி

மேற்கு ஆசி​யா, மத்​திய கிழக்கு நாடு​களுக்கு 10 அமெரிக்க டாலர் (ரூ.920), தென்​கிழக்கு ஆசிய நாடு​களுக்கு 20 டாலர் (ரூ.1,840), ஆப்​பிரிக்க நாடு​களுக்​கு, 30 டாலர் (ரூ.2,760) கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​கிறது.

இந்​தி​யா​வில் இருந்து சிங்​கப்​பூருக்கு இயக்​கப்​படும் விமானங்​களுக்கு எரிபொருள் கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டா​மல் இருந்​தது. இனிமேல் அந்த கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும்.

2-ம் கட்ட கட்டண உயர்வு 18-ம் தேதி அதி​காலை முதல் அமலாகும். ஐரோப்​பிய நாடு​களுக்கு 25 டாலர் (ரூ‌‌.2,300), வட அமெரிக்கா​வுக்​கு, 50 டாலர் (ரூ.4,594), ஆஸ்​திரேலி​யா​வுக்கு 50 டாலர் (ரூ.4,594) கட்டண உயர்வு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

3-ம் கட்​ட​மாக, ஜப்​பான், ஹாங்​காங், தென்​கொரியா செல்​லும் ஏர் இந்​தியா விமானங்​களுக்​கான கட்டண உயர்வு குறித்து பின்​னர் அறிவிக்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

ஏர் இந்​தி​யாவை தொடர்ந்​து, மற்ற நிறு​வனங்​களும் கட்​ட​ணத்தை உயர்த்த முடிவு செய்​துள்​ள​தால், வி​மானப் பயணி​கள்​ பெரும்​ அதிர்ச்​சி அடைந்​துள்​ளனர்​.