கண்டி, பல்லேகலே முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள இலங்கையின் பெரிய அளவிலான இரண்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களான ‘கெலும் லைஃப் சயின்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ‘செலஜென் லங்கா (பிரைவேட்) லிமிடெட்’ ஆகியவற்றின் உற்பத்தித் தொழிற்ச் சாலைகளுக்கு சுகாதார, வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது சுமார் 400 ற்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்கின்றன, மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிர்ணய சான்றிதழ் (EU GMP) பெற்ற இலங்கையின் இரண்டு நிறுவனங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் “சேலைன்” உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமும் இந்த கெலும் நிறுவனமாகும்.
சிறுநீரகப் பாதிப்புக்குள்ளானவர்கள் வீடுகளில் ‘டயாவிசிஸ்’ செய்யும் நோயாளர்களுக்கு (குருதி பிரித் தெடுப்பு) பயன் படுத்தும் பக்கட்டுக்களையும் (Bags) இந்நிறுவன உற்பத்தி செய்கிறது. அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அவற்றைப் பார்வையிடுவதைக் காணலாம்.
கெலும் மற்றும் செலஜென் நிறுவனத்தின் தலைவர் வி. நடராஜா மற்றும் நிர்வாக இயக்குனர் ஐ. சத்தியமூர்த்தி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




