வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தினரின் ஏற்பாட்டில் நீர்வளம் சார்ந்த கலந்துரையாடல் அண்மையில் யாழ் கந்தர்மடத்தில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்ல மண்டபத்தில் சுவீடன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் ந.சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இளைப்பாறிய மூத்த விரிவுரையாளர் கலாநிதி.செல்வராஜா பத்மராஜா கலந்து கொண்டு ” யாழ்ப்பாண நிலத்தடி நீரின் நீடித்த நிலைத்திருப்பும் நீர் தொடர்பில் இலங்கை முழுவதிலிருந்தும் கற்ற பாடங்களும்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களின் நீராதாரம் தொடர்பில் பல உதாரணங்களுடன் விளக்கமாக எடுத்துரைத்தார்.






