தேர்தலில் திமுகவை மக்கள் அகற்றுவர்: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் கருத்து

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுகவை மக்​கள் அகற்​று​வார்​கள் என மத்​திய சட்​டம் மற்​றும் நீதித் துறை அமைச்​சர் அர்​ஜூன் ராம் மேக்​வால் தெரி​வித்​தார்.

தஞ்​சாவூரில் நேற்று கைவினைக் கலைஞர்​களை சந்​தித்த அவர், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் தேர்​தல் அறிக்​கையை உரு​வாக்​கும் பணிக்​காக, பல்​வேறு இடங்​களுக்​குச் சென்று வரு​கிறோம்.

அதன்​படி, கைவினைக் கலைஞர்​களை சந்​தித்​து, அவர்​கள் எதிர்​கொள்​ளும் பிரச்​சினைகள் குறித்து கேட்​டறிந்​து, பாஜக தேர்​தல் அறிக்​கை​யில் சேர்க்க உள்​ளோம். தேர்​தல் முடிந்​து, தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிக்கு வரும்​போது, கைவினைக் கலைஞர்​களின் பிரச்​சினை​கள் தீர்க்​கப்​படும்.

திமுக அரசு மக்​களை பற்றி கவலைப்​பட​வில்​லை. அவர்​களின் குறிக்​கோள், அவர்​களது குடும்​பத்தை மட்​டும் ஊக்​கு​விப்​ப​தாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்​டணி மக்​களை​யும், தமிழகத்​தின் வளர்ச்​சி​யை​யும் மேம்​படுத்​து​வதை குறிக்​கோளாகக் கொண்டுள்​ளது.

தமிழக மக்​களுக்கு நல்​லாட்​சியை வழங்​கு​வோம். தமிழகத்​தில் சட்​டம்- ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது. மேலும், பாலியல் வழக்​கு​கள், கொலை, போதைப் பொருட்​கள், அதி​கார துஷ்பிரயோகம் போன்ற தீமை​களால், மக்​கள் பல்​வேறு பிரச்​சினை​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

எனவே, வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மக்​கள் திமுகவை அகற்​று​வார்​கள். தேசிய ஜனநாய கூட்​டணி அரசு அமைக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.