மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (16) மாலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் கண்டறியப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 2,220 லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மொரகஹஹேன – வெல்மில்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




