குளியாப்பிட்டியில் தலைக்கவசத்தால் தாக்குதல்: சந்தேகநபர் கைது

குளியாப்பிட்டி – மீகஹகொட்டுவ சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தலைக்கவசத்தால் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படும் முன்னர் எந்தவிதமான உத்தியோகபூர்வ முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெறப்பட்ட சி.சி.ரி.வி. காட்சிகளின்படி, சந்தேக நபர் குளியாப்பிட்டி– பன்னலா வீதியிலிருந்து வருகைதந்து, மடம்பே பிரதான வீதியில் குளியாப்பிட்டி நோக்கி பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை தலைக்கவசத்தால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.