ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியா புறப்படவுள்ள 2 எரிவாயு கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிவாயு நிரப்பப்பட்ட 2 கப்பல்கள் இன்று (21) இந்தியாவுக்கு புறப்படத் தயாராக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பைன் கேஸ், ஜக் வசந்த் ஆகிய திரவ பெற்றோலிய எரிவாயு நிரப்பப்பட்ட இந்திய கப்பல்கள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா அருகில் புறப்படத் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கப்பல்கள் இந்தியாவுக்கு புறப்படுவதற்கான அறிவிப்பு சமிக்ஞைகள் கிடைத்துள்ளதாக கப்பல் கண்காணிப்பு தரவு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கு மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ள நிலையில் முன்னதாக 4 கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்குச் சென்றன.

இந்நிலையில், இன்று மேலும் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியாவுக்கு புறப்பட தயாராக உள்ளன.