குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!

அநுராதபுரம் – நொச்சியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுபெத்வெவ குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இநத் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.

நீரில் மூழ்கிய நபர் மீட்கப்பட்டு நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நொச்சியாகம, கட்டுபத்பெத்த பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.