​திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக: அமைச்சர்கள் மீது வேல்முருகன் திடீர் குற்றச்சாட்டு

திமுக கூட்​ட​ணி​யில் இருந்து தமிழக வாழ்​வுரிமைக் கட்சி (தவாக) வில​கு​வ​தாக அக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் அறி​வித்​தார். அமைச்​சர்​கள் தவறு செய்​துள்​ள​தாக குற்​றம்​சாட்​டிய அவர், ஆதா​ரங்​கள் தன்​னிடம் இருப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி​யின் தலை​மையகத்​தில் அக்​கட்​சி​யின் தலை​வர் தி.வேல்​முரு​கன் கூறிய​தாவது: நாங்​கள் கடந்த 2019 நாடாளு​மன்ற தேர்​தல் முதல் திமுக கூட்​ட​ணி​யில் பயணித்​தோம். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி பேச்சு வார்த்​தைக்கு திமுக எங்​களை அழைத்​தது. திமுக​வின் பேச்​சு​வார்த்தை குழு, எங்​களுக்கு ஒரு இடத்தை ஒதுக்​கு​வ​தாக தெரி​வித்​தது.

ஒரு இடத்தை ஏற்​றுக்​கொள்ள முடி​யாது, கூடு​தல் இடங்​களை ஒதுக்க வேண்​டும் என்​றும் இடங்​கள் ஒதுக்​கு​வ​தில் முன்​பின் இருந்​தா​லும் எங்​களின் 10 கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும் என்​றோம். திமுக அரசு எங்​கள் கோரிக்​கைகள் குறித்து சிறிதள​வும் பொருட்​படுத்​த​வில்​லை. கோரிக்​கைகள் வைத்து கூட்​டணி பேசுகிறாயா என பெரியண்​ணன் பாணி​யில் திமுக எங்​களைக் கையாண்​டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததற்கு அரசை இயக்கும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அதிகாரிகளே காரணம். சிலர் திமுக ஆட்​சி​யில் இருந்து கொண்டு பாசிசத்​துக்கு ஆதர​வாக கொடி பிடிக்​கிறார்​கள்​. சமூக நீதிக்கு எதி​ரான சக்​தி​களை வைத்​துக் கொண்​டு, திமுக எப்​படி சமூக நீதியை பின்​பற்​றும்? திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் இத்​தனை ஆண்டு காலம் இருந்​தேன். ஐந்​தாண்டு காலம் மக்​கள் பணி​யாற்ற வாய்ப்பு கொடுத்த முதல்​வருக்கு நன்​றி.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சி, திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கு​கிறது. நாங்​கள் வைத்​துள்ள 10 கோரிக்​கைகளை ஏற்றுக் கொண்​டுள்ள அமைப்​பு​கள், அரசி​யல் கட்​சிகளை கலந்து பேசி, சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்​கொள்​வது குறித்து அதி​காரப்​பூர்​வ​மாக அறி​விப்​பேன். என்​டிஏ தலை​மையி​லான கூட்​ட​ணிக்கு செல்ல மாட்​டோம்.

திமுக அமைச்​சர​வை​யில் உள்ள அமைச்​சர், பரந்​தூரில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கர் இடம் வாங்கி உள்​ளார். அதை 5 மடங்கு கொடுத்து அரசு வாங்​கு​கிறது. அதில், வேல்​முரு​கன் குடைச்​சலாக உள்​ளார் என்று என்னை எதிர்க்​கின்​றனர். கடந்த 5 ஆண்டு கால ஆட்​சி​யில் எந்​தெந்த அமைச்​சர்​கள், எந்த துறை செய​லா​ளர்​கள் அவர்​களது துறை​யில் எவ்​வளவு தவறுகள் செய்​துள்​ளனர் என்​ப​தற்கு ஆதா​ரம் என்​னிடம் உள்​ளது. இனிமேல் தான் பார்க்க போகிறீர்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.