யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றிய மருத்துவர்.குமாரசாமி மகேந்திரன் நல்லூர்ச் சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
கடந்த-2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்-14 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மருத்துவர்.மகேந்திரனுக்கு வெள்ளிக்கிழமை (20.03.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரிவுபசார நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.




