தனியார் காப்புறுதி நிறுவனமொன்றின் மோட்டார் தொழில்நுட்பப் பொது முகாமையாளர் ஒருவர், இலஞ்சம் வழங்கியமை மற்றும் ஊழலுக்கு உடந்தையாக இருந்தஅ ஆகிய குற்றச்சாட்டில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசாங்கப் பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றி 09.12.2025 அன்று கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபர் மூலம் சட்டவிரோதமான முறையில் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, 6,415,050 ரூபாவை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் குறித்த காப்புறுதி நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டித் தரும் நோக்கில் ஊழலுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தனியார் காப்புறுதி நிறுவன அலுவலகத்தில் வைத்துச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




