சிறுவர் பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டு: மெட்டாவுக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்

சமூக வலைத்தளங்களில் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதுடன், சிறுவர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க நியூ மெக்ஸிகோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒவ்வொரு சட்ட மீறலுக்கும் அதிகபட்சமாக இந்த அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், எந்த நிறுவனமும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்ற உறுதியான செய்தி பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு செல்ல வேண்டும் என நியூ மெக்ஸிகோ மாநில தலைமை வழக்கறிஞர் ரவுல் டோரெஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. “எங்கள் தளங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் தொடர்ந்து கடுமையாக செயல்பட்டு வருகிறோம்; எனினும் இந்தத் தீர்ப்புடன் எங்களுக்கு உடன்பாடு இல்லை,” என அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் நல பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 2023 ஆம் ஆண்டு நியூ மெக்ஸிகோ நீதிமன்றத்தால் தொடங்கப்பட்ட இந்த விசாரணையில், மெட்டாவின் உள்ளக ஆவணங்கள், முன்னாள் ஊழியர்களின் சாட்சியங்கள், சிறுவர்கள் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் ஆதாரங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன