தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்தி வரும் அமெரிக்கா : கேலி செய்த ஈரான்

போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்வதற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் பகிரங்கமாகக் கேலி செய்திருப்பது, வொஷிங்டன் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தின் மீது புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளன.

உங்கள் உள்முரண்பாடுகள், உங்களுக்குள்ளேயே பேரம் பேசும் அளவிற்குச் சென்றுவிட்டனவா?” என்று அவர் பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

 

எங்களைப் போன்றவர்களால் உங்களைப் போன்றவர்களுடன் ஒருபோதும் ஒத்துப்போக முடியாது. நாங்கள் எப்போதும் சொல்வது போல… எங்களைப் போன்ற யாரும் உங்களுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள மாட்டார்கள். இப்போது இல்லை. ஒருபோதும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின்போது அமெரிக்கா தன் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளதால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் முன்னதாகக் கூறியிருந்தது.

போர் தொடங்கி நான்கு வாரங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், வரலாற்றிலேயே மிக மோசமான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பணவீக்க அச்சங்களையும் தூண்டியுள்ளது.

 

பாகிஸ்தான் இடைத்தரகர்கள் மூலம் 15 அம்ச அமெரிக்க முன்மொழிவு தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்தும், சாத்தியமான பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் முன்வந்ததைத் தொடர்ந்தும் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திட்டம் மோதலைத் தணிப்பதற்கான ஒரு கட்டமைப்பாக விவரிக்கப்பட்டாலும், பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானுக்கு அதிக ஆர்வம் இல்லை என்பதையே அதன் பதில் உணர்த்துகிறது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.