மத்திய கிழக்கு நெருக்கடியால் யூரியா உரத்தின் விலை அதிகரிப்பு !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சர்வதேச சந்தையில் யூரியா உரத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு மெட்ரிக் டன் யூரியா உரத்தின் விலை 600 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நியூ ஆர்லியன்ஸ் சந்தையில் துகளாக்கப்பட்ட யூரியா உரத்தின் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதவாறு அதன் உச்ச மட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் – ரஷ்யா போர் ஆரம்பமான போது உரத்தின் விலை இவ்வாறே சடுதியாக அதிகரித்திருந்தது.

அதன் பின்னர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விலைகள் ஓரளவுக்குக் குறைந்து ஸ்திரமான நிலையில் காணப்பட்டன. இருப்பினும், தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக மீண்டும் விலையேற்றம் ஆரம்பமாகியுள்ளது.