தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதிமால, பெப்பிலியான வீதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர் ஒருவரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 2025.05.19ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பெயர்: சேனாரத்னகே தனஞ்சய கௌஷல்ய பெரேரா
முகவரி: இலக்கம் 41/14, ஓபன் ப்லேஸ், தெஹிவளை.
சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால், குறித்த தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
பொறுப்பதிகாரி (மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு): 071 – 8596065
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பணியகம்: 011 – 2809077
தகவல் வழங்குவோரின் விபரங்கள் ரகசியமாகப் பேணப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.




