அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த சொகுசு பேருந்து : பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (27) பகல் தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று பிற்பகல் 1.55 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதில் அந்த பஸ் வண்டி முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.

தீ பரவியபோது பஸ்ஸுக்குள் பயணிகள் இருந்தபோதிலும், அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.