அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 2 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு

அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்வெளியிட்டார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகள், பாமக 18 தொகுதிகள், அமமுக 11 தொகுதிகள், தமாகா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ளார்.

இதில், G. செந்தமிழன், C.சண்முகவேல் ஆகிய இரண்டு முன்னாள் அமைச்சர்களுக்கு டிடிவி தினகரன் வாய்ப்பளித்துள்ளார்.

11 வேட்பாளர்கள் விவரம்:

  • திருவையாறு: V. வேலு கார்த்திகேயன்
  • காரைக்குடி: தேர்போகி V. பாண்டி
  • நாங்குநேரி: R. இசக்கிமுத்து
  • ஒட்டப்பிடாரம் (தனி) : இரா. சுந்தர் ராஜன்
  • சைதாப்பேட்டை: G. செந்தமிழன்
  • திருப்பத்தூர்: ஞானசேகரன்
  • மன்னார்குடி: எஸ்.காமராஜ்
  • பூவிருந்தவல்லி: ஏழுமலை
  • பெரியகுளம் (தனி) : K. கதிர்காமு
  • மடத்துக்குளம்: C.சண்முகவேல்
  • திருச்சி மேற்கு: M.ராஜசேகரன்