பஹ்ரைன்–UAE தொழிற்சாலைகள் மீது ஈரான் (IRGC) தாக்குதல்

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அலுமினிய உற்பத்தி மையங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஈரானிய அரசு செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புகளைக் கொண்ட இடங்களைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை (29) தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

‘அலுமினியம் பஹ்ரைன்’ (அல்பா) மீதான தாக்குதலில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்ததாகவும், அபுதாபியில் உள்ள ‘எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம்’ (ஈஜிஏ) கடுமையாக சேதமடைந்து ஆறு பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சலாலா துறைமுகம் மீதான ட்ரோன் தாக்குதலில் ஒரு ஊழியர் காயமடைந்ததாகவும், இதன் காரணமாக புகழ்பெற்ற ‘மெர்ஸ்க்’ நிறுவனம் தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.