திடீரென பாரிய உயர்வை எட்டிய மசகு எண்ணெயின் விலை

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆசியச் சந்தைகள் திறக்கப்பட்டவுடன் மசகு எண்ணெயின் விலை பாரிய உயர்வைச் சந்தித்துள்ளது.

இதனால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் நெருக்கடி ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

கிடுகிடுவென உயரும் பிரெண்ட் கச்சா எண்ணெய் இன்று காலை ஆசிய வர்த்தக நேரத்தின்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் (Brent Crude) விலை ஒரு பேரலுக்கு 115.84 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

இது முன்னைய விலையை விட 2.9 சதவீத அதிகரிப்பாகும்.

போர் ஏற்படுத்திய தாக்கம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, அதாவது பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன், ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் வெறும் 72 டொலராகவே காணப்பட்டது.

பெப்ரவரி 28 வரை, 72 டொலர் மார்ச் 19 (உச்சம்), 118 டொலர் தற்போதைய நிலை,115.84 டொலர் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 112 டொலராக இருந்த விலை, இன்று மீண்டும் 115 டொலரைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடி அச்சம் போர் காரணமாக எண்ணெய் விநியோகத் தடைகள் ஏற்படும் என்ற அச்சமே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

இந்த அதிரடி விலை உயர்வு இலங்கையுட்பட பல நாடுகளில் எரிபொருள் விலையேற்றத்திற்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.