வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர் பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் தனது 47 ஆவது வயதில் காலமானார்.
பக்தி தர்மப்பிரிய மெண்டிஸ் 2000 ஆம் ஆண்டில் ‘லக்பிம’ தினசரி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர் குழு உறுப்பினராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் அவர் தனது ஊடக வாழ்க்கையில் ‘தினமின’ மற்றும் ‘ரிவிர’ ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். காலி பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், காலி ரிச்மண்ட் கல்லூரியின் பழைய மாணவராவார்.
அவரின் பூதவுடல் சனிக்கிழமை (04) பிற்பகல் காலியின் பூஸ்ஸ, மஹகெதர வத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ளன.





