ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யாழ் வருகை !

இந்திய தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமை (05) யாழ்ப்பாணம் வருகை தரும் சுவாமிகள்,  தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வரும் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அலகினை இலங்கையில் உள்ளவர்களும் கற்றுத்தேறும் வண்ணம் அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கின்றார்கள்.

யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினர் கற்கை நெறிக்கான அனுசரனை வழங்குகிறார்கள். கற்பித்தலில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பங்கேற்கின்றனர்.

தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக சிவப்பிரியாவை  27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நியமனம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நெறியில் ஆர்வமுள்ளவர்களை இணைந்து பயனும் பலனும் பெற வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் நோக்கமாகும்.