கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம் !

கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் (03) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கைதிகள் புனர்வாழ்வு நிலையத்தின் பாதுகாப்பை மீறி தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடிய  கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.