கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03) இரவு பதிவாகியுள்ளது.
முல்லைத்தீவிலிருந்து தர்மபுரம் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இருவரும் தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்





