யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 26ஆம் திகதி பண்ணை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , இளைஞனுக்கு படுகாயமேற்படுத்தியதுடன் , இளைஞனின் மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்ற கும்பலில் ஒருவராக குறித்த இளைஞனும் செயற்பட்டுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறை கும்பல் ஒன்றின் முக்கிய உறுப்பினராகச் செயற்படும் குறித்த நபருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது மருதனார்மடம் சந்தையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





