மறைந்த ஈரானியத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின் 40-ஆம் நாள் நினைவேந்தல் கொழும்பில் நடைபெற்றது!

ஈரானின் முன்னாள் உச்சநிலைத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மறைவையொட்டி, அவரை நினைவுகூரும் விதமாக விசேட  நினைவேந்தல் நேற்று (09) வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

ஈரானிய மரபுப்படி, ஒரு தலைவர் மறைந்து 40 நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் இந்த  நினைவேந்தல், கொழும்பில் உள்ள ஈரானிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் அவர்களின் நேரடி அனுசரணையில் கீழ் இந்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நினைவேந்தலில் விமல் வீரவன்ச உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.

ஈரானின் முன்னாள் உச்சநிலைத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின்  மறைவு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே தற்போது நிலவும் போர்ச் சூழலுக்கு முக்கிய காரணமாகும்.