காலியில் கடலில் நீராடச் சென்ற யாழ்.மாணவன் விதுசன் உயிரிழப்பு!

காலி பெந்தோட்டைக் கடலில் சக நண்பர்களுடன் இணைந்து நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19.04.2026) இடம்பெற்றுள்ளது.

யாழ்.சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மொரட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவரான கதிர்காமநாதன் விதுசன் (வயது-25) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.